/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பறக்கும் படை சோதனை ரூ.1.64 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனை ரூ.1.64 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 29, 2024 01:03 AM
குளித்தலை:குளித்தலை
அடுத்த, கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மருதுார்
சோதனைச்சாவடியில், நேற்று மதியம், 2:00 மணியளவில் பறக்கும் படை
அலுவலர் பரமேஷ்வரன் தலைமையில், எஸ்.ஐ., மதியழகன், போலீசார் வாகன
சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருச்சி மாவட்டம்,
தொட்டியம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரிசி வியாபாரி
விஜயகுமார், 36, என்பவர், அந்த வழியாக டூவீலரில் சென்றார். அவரை
நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல், 92,960 ரூபாய்
ரொக்கம் கொண்டுச்சென்றது தெரியவந்தது. பறக்கும் படையினர் பணத்தை
பறிமுதல் செய்தனர்.
இதேபோல், காவல்காரன்பட்டி துணை மின் நிலைய
அலுவலகம் முன் நடத்திய சோதனையில், சோமரசம்பேட்டையை சேர்ந்த
ராம்குஹா, 23, என்பவர், உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற, 71,190
ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்
தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

