/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு
/
மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்க பொதுக்குழு
ADDED : ஆக 19, 2024 03:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், கரூர் வட்ட பொதுக்குழு கூட்டம், வட்ட தலைவர் மாரி-யப்பன் தலைமையில், நேற்று நடந்தது. அதில், மின் துறையை பொது துறையாகவே தொடர வேண்டும்.
பழைய பென்சன் திட்-டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் நலச்சட்-டங்களை பாதுகாக்க வேண்டும். கள உதவியாளர் பணியிடங்-களை ஐ.டி.ஐ., படித்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்-பன உள்ளிட்ட, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், வட்ட அமைப்பு செயலாளர் கதிர்வேல், பொருளாளர் எட்வின் உள்பட பலர் பங்கேற்றனர்.

