/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்; தெறிக்கவிட்ட இ.ஓ.,; போர்க்கொடி துாக்கிய கவுன்சிலர்கள்
/
அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்; தெறிக்கவிட்ட இ.ஓ.,; போர்க்கொடி துாக்கிய கவுன்சிலர்கள்
அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்; தெறிக்கவிட்ட இ.ஓ.,; போர்க்கொடி துாக்கிய கவுன்சிலர்கள்
அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்; தெறிக்கவிட்ட இ.ஓ.,; போர்க்கொடி துாக்கிய கவுன்சிலர்கள்
ADDED : ஆக 13, 2024 06:11 AM
ப.வேலுார்: ''மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவு தேவையில்லை. அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்,'' என, மேஜையை தட்டி பேசிய, செயல் அலுவலரை கண்டித்து, 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்-டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவரா-கவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். மன்ற அலுவல-கத்தில், நேற்று, கவுன்சிலர் கூட்டம் தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதில், மூன்று தீர்மானங்களுக்கு ஆதரவும், 14 தீர்மானங்களுக்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பும்
தெரிவித்தனர்.
அப்போது, செயல் அலுவலர் சோமசுந்தரம், ''அனைத்து தீர்மா-னங்களையும் கவுன்சிலர்கள் நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. மன்ற கூட்-டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவு தேவையில்லை. அனைத்து தீர்மா-னங்களையும் நானே நிறைவேற்றுவேன். எனக்கு சட்டம் தெரியும், சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன்,'' எனக்கூறி, மேஜையை தட்டி பேசினார். இதனால், செயல் அலுவலருக்கும், கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம்
ஏற்பட்டது.
தொடர்ந்து, தீர்மானங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்-பதால், டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் வெளியே சென்று விட்டனர். இதையடுத்து, 'கூட்டத்தை நிறைவு செய்ய தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் வரவேண்டும்' என, வலியுறுத்தி, 10 கவுன்சிலர்களும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்-டது.
இதுகுறித்து, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் கூறியதாவது:
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தை, மீண்டும் முடக்கும் நிலைக்கு செயல் அலுவலர் சோமசுந்தரம், சர்வாதிகாரி போல் நடந்து கொள்கிறார். நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த, 14 தீர்மானங்களுக்கும் மன்ற கூட்டத்தில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. ஆனால், செயல் அலுவலர் சோமசுந்தரம் அனைத்து தீர்மானங்களும் நிறை-வேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த மன்ற கூட்டத்தில், சுல்தான்பேட்டை சந்தை வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பி-டத்தை அகற்ற தீர்மானம் நிறைவேற்றினோம். ஆனால், இன்று (நேற்று) நடந்த மன்ற கூட்டத்தில் அந்த கழிப்பிடத்தை பராம-ரிப்பு செய்ய, 15 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டதாக அறிவித்துள்ளனர். இதற்கு கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரி-வித்துள்ளோம். இதுபோல் பல தீர்மானங்கள் உள்ளன.
அதனால், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சோமசுந்தரத்தை கண்-டித்தும், தன்னிச்சையாக செயல் அலுவலர் நிறைவேற்றிய
தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் உள்ளிருப்பு போராட்டம் செய்து வருகிறோம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக-ளான எங்களை மன்ற கூட்டத்தில் மரியாதைக்குறைவாக பேசு-கிறார். இதனால், தி.மு.க.,வை சேர்ந்த, ஒன்பது கவுன்சிலர்கள், பா.ம.க., கவுன்சிலர் ஒருவர் என, 10 பேரும் செயல் அலுவலரை மாற்ற வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் நேரில் சென்று மனு கொடுக்க
உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது:
இன்று (நேற்று) ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. எதற்காக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர் என, எனக்கு தெரியவில்லை. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளபடி, நான் ஒரு தரப்புக்கு சாதக-மாக தீர்மானங்களை நிறைவேற்றவில்லை. கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், சட்டப்படி செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளனர். அதேபோல் சட்டப்படி
செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.