/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
/
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
பெங்களூருவில் இருந்து கடத்தி வந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : ஆக 31, 2024 12:31 AM
கரூர்: கர்நாடகா மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்-களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், நேற்று கரூர் பஸ் ஸ்டாண்ட் மனோகரா கார்னர் பகு-தியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு உரிய வகையில் பேக்குடன் வந்த ஒரு-வரை, போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து, 300 மது பாட்டில்களை, பேக்கில் வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் மதுபாட்டில்களை கடத்தி வந்தவர், கரூர் துளசி கொடும்பு பகுதியை சேர்ந்த பழனி-சாமி, 40, என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை
பறிமுதல் செய்தனர்.