/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரகூர் கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் பராமரிப்பு
/
வரகூர் கிராம பகுதிகளில் மரக்கன்றுகள் பராமரிப்பு
ADDED : ஆக 29, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், ஆக. 29-
கிருஷ்ணராயபுரம் அடுத்த, வரகூர் பகுதியில் இருந்து குழந்தைப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. சாலை இருபுறமும், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள்
நடப்பட்டுள்ளது.
இதில் வேம்பு, புளிய மரம், அரச மரம், புங்கமரம் ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் வளர்ந்து வரும் நிலையில், மழை காரணமாக அதிகமான களைகள் செடிகளை சுற்றி வளர்ந்தது.
இந்நிலையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் களைகள் முழுவதும் அகற்றும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள்
ஈடுபட்டனர்.

