/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்
/
கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்
கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்
கரூர் மாவட்ட வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர்
ADDED : ஆக 03, 2024 01:09 AM
கரூர், கரூர் மாவட்டத்தில் நடந்து வரும், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, நில நிர்வாக ஆணையரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.
கரூர் மாவட்டத்தில், 14.07 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், ராஜேந்திரம் பஞ்சாயத்தில், 22 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பொது நூலகம், மணத்தட்டையில் அம்ருத் திட்டத்தில், 13.04 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை தொட்டி, 30 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலையம் உள்ளிட்ட, பல்வேறு வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.
மேலும், மாயனுார் செல்லாண்டியம்மன் கோவில் காவிரியாற்று பகுதியில், ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பார் வையிட்டு, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது, டி.ஆர்.ஓ., கண்ணன், திட்ட இயக்குநர் ஸ்ரீ லேகா, ஆர்.டி.ஓ.,க்கள் தனலட்சுமி, முகமது பைசல், நீர்வளத்துறை செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணா, நகராட்சி ஆணையாளர்கள் நந்தகுமார், ேஹமலதா உள்பட, பலர் உடனிருந்தனர்.