/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் முப்பூஜை
/
அங்காள பரமேஸ்வரி கோவிலில் முப்பூஜை
ADDED : ஆக 20, 2024 02:55 AM
கிருஷ்ணராயபுரம்: கோரகுத்தி கிராமத்தில், அங்களா பரமேஸ்வரி வீரபத்திரன் புடவைக்காரி அம்மன், மதுரை வீரன் இருளப்பன், உக்கரண்டி சந்தன கருப்பு, பட்டவன் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு முப்பூஜை திருவிழா நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த கோரக்குத்தி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி, வீரபத்திரன், புடவைக்காரி அம்மன், மதுரை வீரன், இருளப்பன், உக்கரண்டி, சந்தன கருப்பு, பட்டவன் ஆகிய பரிவார சுவாமிகளுக்கு முப்பூஜை திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் மாயனுார் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு காவிரி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து கொண்டு வரப்பட்டது. இரவு மாயன பூஜை செய்யப்பட்டது. இரண்டாவது விழாவில் பொங்கல் வைத்தல், இரவு புடவைக்காரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜை, கிடா வெட்டுதல், நேர்த்திக்கடன் செலுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

