ADDED : ஆக 20, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, பெண் கூலி தொழிலாளி கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், புலியூர் பி. வெள்ளாப்ப ட்டி பகுதியை சேர்ந்த பிச்சை மனைவி முத்தாயி, 56; கூலி தொழிலாளி. இவர் கடந்த, 12 ல் இரவு கரூர் அருகே சின்னமநாயக்கன்பட்டி பகுதியில், ெஷட் ஒன்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் முத்தாயி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது, கரூர் மாவட்டம், தோகமலை சுக்காம்பட்டி பகுதியை சேர்ந்த பழனிவேலு, 38, என்பவர் மழைக்காக செட்டில் ஒதுங்கி நின்ற, முத்தாயியை கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த தங்கதோடு, மூக்குத்தி ஆகியவற்றை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, பழனிவேலுவை வெள்ளியணை போலீசார், கைது செய்து விசாரிக்கின்றனர்.

