/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மின் வாரிய கேங்க்மேன்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு: பஸ் பறிமுதல்
/
கரூரில் மின் வாரிய கேங்க்மேன்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு: பஸ் பறிமுதல்
கரூரில் மின் வாரிய கேங்க்மேன்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு: பஸ் பறிமுதல்
கரூரில் மின் வாரிய கேங்க்மேன்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு: பஸ் பறிமுதல்
ADDED : ஆக 20, 2024 02:56 AM
கரூர்: சென்னையில் ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்ட மின் வாரிய கேங்மேன்களை, போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது, போலீசாருக்கும், கேங்மேன்களுக்கும் இடை யே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தமிழக மின் வாரியத்தில் கேங்மேன் பதவியில் பணிபுரியும் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை தலைமை செயலகம் முன், நேற்று காலை ஆர்ப்பா ட்டம் நடத்த முடிவு செய்தனர். அதற்காக, மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேங் மேன்கள் நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் சென்னை புறப்பட்டு சென்றனர்.
கரூரில், கோவை சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் முன், இருந்து நேற்று நள்ளிரவு, மின் வாரிய கேங் மேன்கள், 32 பேர் ஒரு தனியார் பஸ்சில் சென்னை புறப்பட தயாராக இருந்தனர். அப்போது, கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ், இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளிட்ட, 25 க்கும் மேற்பட்ட போலீசார், மின் வாரிய கேங்மேன் களை சென்னை செல்ல விடாமல் தடுத்து கைது செய்தனர்.
அப்போது, போலீசாருக்கும், மின்வாரிய கேங் மேன்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட கேங்க் மேன்கள், கரூர் உழவர் சந்தை அருகே உள்ள தனியார் திருமண மண்டப்பத்தில் அடைக்கப்பட்டனர். அவர்கள் செல்ல இருந்த பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை, மின் வாரிய கேங்மேன்களை சந்தித்த, கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் நன்மாறன் நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றகோரி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த, கரூரில் இருந்து, மின் வாரிய கேங்மேன்கள் புறப்பட்டனர். ஆனால், அவர்களை கரூர் போலீசார் தடுத்து நிறுத்தி, அடித்து கைது செய்துள்ளனர். ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்வதும், தாக்குவதும் கண்டனத்துக் குரியது.
கேங்மேன்களை அழைத்து செல்ல வந்த தனியார் பஸ் டிரைவரையும் கைது செய்து, பஸ்சை பறிமுதல் செய்து நிறுத்தி வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் மட்டும், தி.மு.க., அர சை எதிர்த்து, ஜனநாயக முறைப்படி போரா ட்டம் நடத்த, போலீசார் அனுமதி மறுக்கின் றனர். மற்ற மாவட்டங்களில் இதுபோன்ற சூழ்நிலை இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

