ADDED : ஆக 19, 2024 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, கோம்புபாளையம் பஞ்., நடையனுாரில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. அதில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ஒன்பது லட்சத்து, 13,000 ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, புதிய ரேஷன் கடையை, அர-வக்குறிச்சி தி.மு.க., - எம்.எல்.ஏ., இளங்கோ திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்-கினார்.
விழாவில், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் அருண்மொழி, பஞ்., தலைவர் பசுபதி, சார் பதிவாளர் விஜி, கூட்டுறவு வங்கி செயலாளர் சுப்பிரமணியன் உள்பட, பலர் பங்கேற்றனர்.