/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி மீண்டும் திறப்பு
/
மூடப்பட்ட அரசு தொடக்கப் பள்ளி மீண்டும் திறப்பு
ADDED : செப் 03, 2024 03:39 AM
கரூர்: ஒரு மாணவர் கூட இல்லாத, இரண்டு பள்ளிகள் மூடப்பட்டதாக நமது நாளிதழில் செய்தி வெளியானதையடுத்து, வெங்கடாபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளி மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
கரூர் மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 751 அரசு மற்றும் அரசு நிதி உதவி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் செயல்-பட்டு வருகிறது.எல்.கே.ஜி., முதல் எட்டாம் வகுப்பு வரை, 38 ஆயிரத்து, 812 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதில், 73 பள்ளி-களில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை என்ற பரி-தாப நிலையில் உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் நெடுங்கூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில் வெங்கடா-புரம் ஆகிய இரண்டு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களே இல்லாததால் மூடப்பட்டு விட்டது என, கடந்த, 30ல் நமது நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இப்பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என, பள்ளி கல்வித்-துறை உத்தரவிட்டது. அதன்படி, தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்தில், வெங்கடாபுரம் தொடக்கப்பள்ளி மீண்டும் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.
இது குறித்து, கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராமநா-தன்செட்டி கூறுகையில்,'' வெங்கடாபுரம் பள்ளி இரண்டு ஆசிரி-யர்கள், மூன்று மாணவர்களுடன் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் மாணவர்களை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.