/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
/
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 13, 2024 07:53 AM
கரூர்: கரூர் செங்குந்தபுரம் மாநகராட்சி பிரிவு அலுவலகத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நிரந்த-ரமற்ற துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டு-னர்கள் என, 520 பேர் பணிபுரிந்து வருகின்றனர். துாய்மை பணி-யாளர்களுக்கு ஒரு நாளைக்கு, 592 ரூபாய், ஓட்டுனர் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, 669 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால், குறைவாக சம்பளம் வழங்கப்பட்டு வருகி-றது. மாதத்தில், 20ம் தேதி வரை சம்பளம் வழங்காமல் இருக்-கின்றனர். மாதந்தோறும், 5ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
போராட்டத்தில், மாவட்ட செயலாளர் முருகேசன், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை தலைவர்கள் ராஜாமுகமது, சரவணன், கந்த-சாமி, கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.