ADDED : ஆக 20, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் குடிமை பொருள் வழங்கல், குற்றப்புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் செந்தில் குமார், எஸ்.ஐ., கார்த்திகேயன் உள்ளிட்ட, போலீசார் நேற்று முன் தினம் இரவு, அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வேனில், 600 கிலோ ரேஷன் அரிசியை, மூட்டைகளில் கடத்தி வந்ததாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன், 36, கவியரசு, 35, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து வேனை பறிமுதல் செய்தனர்.

