/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 16, 2024 01:07 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் வெண்ணிலா தலைமை வகித்தார். இதில், பஞ்சாயத்து சார்பில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள், அடிப்படை பிரச்னை குறித்து பேசப்பட்டது. மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு குடிநீர் வழங்குதல், சுற்றுப்புறத்துாய்மை மேம்படுத்துதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள், மக்கள் அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* கள்ளப்பள்ளி பஞ்., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைவர் சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டத்தில், பஞ்சாயத்து சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள், மரக்கன்றுகள் பராமரிப்பு, குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கள்ளப்பள்ளி தெற்கு, கருப்பத்துார் கிராமங்களில் ஏற்படும், குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைகளை தீர்ப்பதற்கான வழிகள் காணப்பட்டது.

