/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டீக்கடை பலகாரத்தில் எலி கடைக்கு 'சீல்' வைத்த அதிகாரி
/
டீக்கடை பலகாரத்தில் எலி கடைக்கு 'சீல்' வைத்த அதிகாரி
டீக்கடை பலகாரத்தில் எலி கடைக்கு 'சீல்' வைத்த அதிகாரி
டீக்கடை பலகாரத்தில் எலி கடைக்கு 'சீல்' வைத்த அதிகாரி
ADDED : ஆக 31, 2024 12:31 AM
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலையில் எலியுடன் மசால் வடை சாப்-பிட்டவர் வாந்தி எடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடைக்கு சீல் வைத்தனர்.
குளித்தலை, வைகைநல்லுார் அக்ரஹாரம் பிரிவு சாலையில் பாபு என்பவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டீ, பலகார கடை நடத்தி வருகிறார். குளித்தலை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் கார்த்தி, 33,
நேற்று மதியம் 12:30 மணியளவில் டீக்கடையில் மசால் வடை வாங்கினார். வடை பாதி சாப்பிட்டு விட்டு பார்த்தபோது, அதில் எலி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து வாந்தி எடுத்தார்.
இதுகுறித்து கடை உரிமையாளர் பாபுவிடம் கேட்டபோது, 'அது ஒன்றும் செய்யாது, சிறிய எலிதான்' என்று கூறியுள்ளார். இதை கண்டுகொள்ளாமல், அங்கு வந்தவர்களிடம் பலகாரங்களை பாபு விற்பனை செய்து வந்தார்.
இதுகுறித்து, சமூக வலைதளங்களில் படம் வைரலானது. குளித்தலை எஸ்.ஐ., பிரபாகரன் டீக்கடையில் விசாரணை நடத்தி, நகராட்சி நிர்வாகத்திற்கு தெரிவித்தார். பின்னர், நகராட்சி துாய்மை பணியாளர்கள் அந்த கடையின்
தின்-பண்டங்கள், பொருட்களை கைப்பற்றி, நகராட்சி அலுவகத்திற்கு கொண்டு சென்றனர். பாதிக்கப்பட்ட கார்த்திக், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர், பரமத்தி உணவு பாதுகாப்பு அலுவலர் பாஸ்கர், டீக்க-டையில் சோதனை செய்தார். கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி, புகார் உண்மையென தெரியவந்தால் சட்டப்படி நடவ-டிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்சை
செய்து விட்டு, கடைக்கு 'சீல்' வைத்தார்.