/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
/
கரூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கரூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
கரூரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
ADDED : ஆக 08, 2024 01:48 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், போக்கு
வரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட னர்.
லோக்சபா தேர்தலுக்கு பிறகு, தமிழக காவல் துறையில் உயர் போலீஸ் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். திருச்சி மத்திய மண்டல காவல் துறை சரகத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த, 5 ல் சட்டம்-ஒழுங்கு மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த, 47 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய் யப்பட்டனர். அதைதொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு திருச்சி மத்திய மண்டல காவல் துறை சரகத்தில், 10 போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். கரூர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, புதுக்கோட்டை ஆயுதப்படைக்கும், குளித்தலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷன், திருச்சி மாவட்டம், சமயபுரம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும், கரூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ராஜன், திருச்சி துவாக்குடி போக்கு
வரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திருச்சி மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், கரூர் மாவட்ட ஆயுதப்படைக்கும், திருச்சி மாவ ட்டம், முசிறி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால், கரூர் பசுபதிபாளையம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.