நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், திருச்சி மாவட்டம், கல்லக்குழி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகள் பிரியதர்ஷினி, 25; திருமணம் ஆனவர். இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்சனை காரணமாக பிரியதர்ஷினி, கணவர் பாரதியை பிரிந்து,
ஆறு மாதங்களாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 10 ல் கரூர் அரசு கலைக்கல்லுாரிக்கு பி.ஏ., அரியர் தேர்வு எழுத சென்ற பிரியதர்ஷினி வீடு திரும்ப வில்லை. உறவினர்களின் வீடுகளுக்கும் பிரியதர்ஷினி செல்லவில்லை. தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.