நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, குழந்தைப்பட்டி, பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, கணக்கப்பிள்ளையூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் கொத்தமல்லி சாகுபடி செய்து வருகின்றனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது பசுமையாக வளர்ந்த செடிகளை பறித்து, மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
கடந்த மாதம் கொத்த மல்லி கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையால், செடிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வரத்து சரிந்துகட்டு ஒன்று, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியது என்பதால், விவசாயிகள் கொத்தமல்லிக்கு முக்கியத்துவம் அளித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

