/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பத்தாம்பட்டி பிரிவு பயணிகள் நிழற்கூடம்

ADDED : ஆக 30, 2024 04:26 AM
கரூர: கரூர்-திண்டுக்கல் சாலை பத்தாம்பட்டி பிரிவு நிழற்கூடத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்துள்ளதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் ஈசநத்தம் வழியாக திண்டுக்கல் செல்லும் சாலையில் பத்தாம்பட்டி பிரிவு சாலை உள்ளது. இந்த பகுதியில் கரூர் செல்லும் பஸ்கள், நின்று பயணிகளை ஏற்றிச் செல்லவும், பொதுமக்கள் காத்திருக்கவும் நிழற்கூடம் அமைக்கப்பட்டது.
தற்போது அந்த நிழற்கூடம் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது. பகல் மற்றும் இரவு நேரங்களில், அங்கு அமர்ந்து மது குடிப்பது, சீட்டாட்டம் நடத்துவதால், அப்பகுதியினர் பஸ்சுக்காக காத்திருந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிழற் கூடத்தைபுதுப்பித்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.