/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நெரூரில் வரும் 11ல் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
/
நெரூரில் வரும் 11ல் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
நெரூரில் வரும் 11ல் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
நெரூரில் வரும் 11ல் நாத உற்சவம் 300 இசைக்கலைஞர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 08, 2024 06:56 AM
கரூர்: கரூர் அருகே, நெரூர் சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில், 14 வது நாத உற்சவ பெரு விழா வரும், 11 ல் நடக்கிறது.
பிரசித்தி பெற்ற, நெரூர் சுயம்பு அக்னீஸ்வரர் கோவிலில் நாளை காலை, 8:00 மணிக்கு, பிரபாகரன் குழுவினரின் மங்கள இசை-யுடன் விழா தொடங்குகிறது. 8:30 மணிக்கு நாத சங்கமம், 11:30 மணிக்கு சிவ நடராஜனின், திருத்தொண்டும் வழிபாடும் என்ற தலைப்பில் அருளுரை, மதியம், 2:00 மணிக்கு உமா நந்தினி பாலகிருஷ்ணனின் தேவாரப் பண்ணிசை மற்றும் விளக்க உரை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு 300க்கும் மேற்பட்ட நாதஸ்வர, தவில் வித்வான்களின் நாத உற்சவ பெரு-விழா நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ அக்னீஸ்வரர் வழி-பாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.