/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
344 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
/
344 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
ADDED : மார் 02, 2025 01:33 AM
344 இடங்களில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா
கரூர்:கரூர் மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா, 344 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது
முதல்வர் ஸ்டாலின், 72வது பிறந்த நாளை விழா கரூர் மாவட்டத்தில், 344 இடங்களில் கொண்டாடப்பட்டது. கரூர் வெண்ணைமலை அன்புகரங்கள் ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லத்தில், மாவட்ட தி.மு.க., சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இங்கு, கேக்கை வெட்டி கொண்டாடிய பின், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின், முதியோர், குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேயர் கவிதா, மாநகர செயலாளர் கனகராஜ், மண்டல தலைவர் ராஜா, பகுதி செயலாளர்கள் ஜோதிபாசு, குமார், மாநகராட்சி, 5வது வார்டு கவுன்சிலர் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் வெங்கமேட்டில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை அருகில் வடக்கு மாநகர தி.மு.க., சார்பில் கொடியேற்று விழா நடந்தது. பின், பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
* கரூர் கோயம்பள்ளியில், தான்தோன்றிமலை மேற்கு ஒன்றியம் சார்பில், துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன், 35க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு இனிப்பு, அன்னதானம், சீருடை வழங்கி கொண்டாடினார்.
* முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. டவுன் பஞ்., தலைவர் சேதுமணி தலைமை வகித்தார். கவுன்சிலர்கள் ராதிகா, சசிக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.