/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.35.39 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
/
ரூ.35.39 லட்சம் மதிப்புள்ள வேளாண் பொருட்கள் ஏலம்
ADDED : பிப் 05, 2025 01:13 AM
கரூர் :சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 35 லட்சத்து, 39 ஆயிரத்து, 913 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
கரூர் மாவட்டம், நொய்யல் அருகில் சாலைபுதுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் ஏலம் வாரந்தோறும் திங்கள்கிழமை நடக்கிறது. கரூர், க.பரமத்தி சுற்று வட்டார விவசாயி
கள், தங்கள் நிலத்தில் விளையும் தேங்காய்களை விற்பனை செய்கின்றனர். இதன்படி, நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 7,690 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 44.44 ரூபாய், அதிகபட்சமாக, 55.89 ரூபாய், சராசரியாக, 52.65 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 2,124 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 92 ரூபாய்க்கு விற்பனையானது. 365 கொப்பரை தேங்காய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 135.06 ரூபாய், அதிகபட்சமாக, 146.30 ரூபாய், சராசரியாக, 145.39 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 94.89, அதிகபட்சமாக, 139.49, சராசரியாக, 126.49 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 17,170 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 21 லட்சத்து, 18 ஆயிரத்து, 188 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
எள், 153 மூட்டைகள் விற்பனைக்கு வரத்தாகின. வெள்ளை ரகம் ஒரு கிலோ குறைந்தபட்சம், 103.10, அதிகபட்சமாக, 120.90, சராசரியாக, 117.60 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11 ஆயிரத்து, 413 கிலோ எடையுள்ள எள், 13 லட்சத்து, 9,632 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 35 லட்சத்து, 39 ஆயிரத்து, 913 ரூபாய்க்கு
விற்பனை நடந்தது.