/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புனித சூசையப்பர் ஆலயத்தின் 36 ம் ஆண்டு திருவிழா
/
புனித சூசையப்பர் ஆலயத்தின் 36 ம் ஆண்டு திருவிழா
ADDED : மே 05, 2024 01:58 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின், 36ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்தது.
கடந்த, 28 அன்று புனித சூசையப்பர் ஆலயத்தின் முகப்பு வாயிலில், அன்னையின் சொரூபம் அமைக்கப்பட்டு நவநாள் ஜெபம் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் மாலை, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட அன்னை மாதாவிற்கு நவநாள் ஜெபம் நடந்தது. ஏராளமானோர் அன்னையை வழிபட்டு சென்றனர். கடந்த 30 மாலை ஆலயத்தின் 36ம் ஆண்டு திருவிழாவை ஒட்டி கொடியேற்றம் நிகழ்வு நடந்தது.
பேரூர் பங்கு தந்தை இருதயராஜ், திருப்பலி நிறைவேற்றினார். மணப்பாறை மவுன மடம் இல்ல அதிபர் அமல்ராஜ் தலைமையில், சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று இரவு புனித சூசையப்பர் மற்றும் அன்னை மாதா ஆகியோர், மின் அலங்கார சப்பரத்தில் பவனி வந்தனர்.