sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

/

கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்

கரூர் மாவட்டத்தில் 4 பெண்கள் மாயம்


ADDED : ஆக 24, 2024 01:13 AM

Google News

ADDED : ஆக 24, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் மாவட்டத்தில், நான்கு இளம்பெண்களை பல்வேறு இடங்களில் காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கரூர், காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பிரபாகர் என்பவரது மகள் ேஷாபிகா, 22; டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில், கணக்காளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 22ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற மகள் ேஷாபிகாவை காணவில்லை என, தந்தை பிரபாகரன், 55; கரூர் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார்.

* கரூர் வடிவேல் நகர் எல்.என்.எஸ்., போஸ்ட் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் மனிஷா, 21; பி.எஸ்.சி., வரை படித்துள்ளார். இவர் கடந்த, 22 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மனிஷாவின் தாய் ஜெயந்தி, 45; போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கரூர் அருகே வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை பகுதியை சேர்ந்த நாசர் பாஷா என்பவரது மகள் சபானா, 21; பி.ஏ., வரை படித்துள்ளார். இவர் கடந்த, 22 ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, சபானாவின் தாய் குர்ஷர்த்தா, 45; போலீசில் புகார் செய்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

* க.பரமத்தி அருகே அத்திப்பாளையம் புதுார் பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் பிரதீபா, 19; கரூர் அரசு விவசாய கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாமாண்டு படித்து வருகிறார். கடந்த, 21ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரதீபா, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தாய் வெண்ணிலா, 43; போலீசில் புகார் செய்துள்ளார்.

க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us