/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூதாட்டியிடம் 5 பவுன்தங்க செயின் பறிப்பு
/
மூதாட்டியிடம் 5 பவுன்தங்க செயின் பறிப்பு
ADDED : மார் 16, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூதாட்டியிடம் 5 பவுன்தங்க செயின் பறிப்பு
கரூர்:கரூரில் நடந்து சென்ற மூதாட்டியிடம், தங்க செயினை பறித்து சென்ற, மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர், வையாபுரி நகரை சேர்ந்தவர் புஷ்பாத்தாள், 65; இவர், நேற்று முன்தினம் இரவு, 80 அடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, டூவீலரில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், புஷ்பாத்தாள் அணிந்திருந்த, ஐந்து பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். இதுகுறித்து, புஷ்பாத்தாள் போலீசில் புகார் செய்தார்.
கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.