/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.6.14 லட்சம் காணிக்கை
/
ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரூ.6.14 லட்சம் காணிக்கை
ADDED : ஆக 29, 2024 02:03 AM
குளித்தலை, ஆக. 29-
குளித்தலை அடுத்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, பக்தர்கள் செலுத்திய காணிக்கையை உண்டியல்களை திறந்து கணக்கீடு செய்து, கோவில் வங்கி கணக்கில் வரவு வைப்பது வழக்கம்.
இதன்படி நேற்று காலை, கோவில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில், கரூர் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடராமன் கோவில் உதவி ஆணையர் இளையராஜா தலைமையில், குளித்தலை ஆய்வாளர் மாணிக்கசுந்தரம், கோவில் செயல் அலுவலர் தங்கராஜூ ஆகியோர் முன்னிலையில் எட்டு உண்டியல்கள் திறக்கப்பட்டன.
கோவில் பணியாளர்கள், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் காணிக்கையை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஐந்து லட்சத்து, 83 ஆயிரத்து, 549 ரூபாய், ரோப் கார் உண்டியலில், 30 ஆயிரத்து, 926 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்தது. மொத்தம் ஆறு லட்சத்து, 14 ஆயிரத்து, 475 ரூபாய் கோவில் வங்கி கணக்கான குளித்தலை இந்தியன் வங்கியில் வரவு
வைக்கப்பட்டது.