/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு
/
மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு
மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு
மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியதால் பரபரப்பு
ADDED : ஆக 15, 2024 01:35 AM
கரூர், கரூரில், மின்சார டிரான்ஸ்பார்மர் மீது, அரசு பஸ் மோதியது.
ஈரோட்டில் இருந்து, திருச்சி சென்ற அரசு பஸ் நேற்று மாலை, கரூர் ஆண்டாங்கோவில் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில், 25க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கரூர் உழவர் சந்தை பகுதியில் இருந்து, எதிரே டூவீலரில் வந்தவர் மீது மோதாமல் இருக்க, டிரைவர் அரசு பஸ்சை இடது புறமாக திருப்பினார்.
அப்போது, அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது பஸ் மோதியது. இதனால், டிரான்ஸ்பார்மரில் இருந்த, 250 லிட்டர் கூலிங் ஆயில் கீழே கொட்டியது. இதையடுத்து, அந்த பகுதியில் மின்சாரம் கட்டானது. பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரத்தில் அரசு பஸ் பயணிகளுடன், திருச்சிக்கு புறப்பட்டு சென்றது. பிறகு, வேறு ஒரு மின்சார டிரான்ஸ்பார்மர் மூலம், ஆண்டாங்கோவில் பிரிவு பகுதிக்கு, மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.