/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் அதிகாலையில் மொபைல் கடையில் தீ விபத்து
/
கரூரில் அதிகாலையில் மொபைல் கடையில் தீ விபத்து
ADDED : ஆக 11, 2024 02:12 AM
கரூர்;கரூரில், மொபைல் போன் கடையில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
கரூர், திருமாநிலையூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ், 42. இவர், கரூர்-திண்டுக்கல் பழைய சாலையில், மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, ராஜேஷ் வழக்கம் போல் கடையை மூடி விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மொபைல் போன் கடையில் இருந்து, புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் கடையில் தீ எரிய தொடங்கியது. அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் சென்று, மொபைல் கடையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த புதிய மற்றும் பழைய மொபைல் போன்கள், தீயில் கருகி நாசமாயின. சேதம் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என தெரிகிறது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு காரணம் உள்ளதா என, கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

