/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
/
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
ADDED : மே 01, 2024 02:05 AM
கரூர்:'பொதுமக்கள் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என, கரூர் மாநகராட்சி கமிஷனர் சுதா தெரிவித்தார்.
அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் மாநகராட்சிக்கு பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குவது காவிரி ஆறு. மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் உள்ளது. ஆற்றில் போதுமான நீர் வரத்து இல்லை. குறைந்த நீர் ஆதாரத்தை கொண்டு கரூர் மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மிகுந்த ஆழத்திற்கு சென்று விட்டதால், ஆழ்துளை கிணற்றிலிருந்து வரும் நீரின் அளவும் குறைந்து விட்டது. பொதுமக்கள் கிடைக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
அதிக வெப்ப அலையின் காரணமாக கரூர் பஸ் ஸ்டாண்ட், மாநகராட்சி அலுவலகம் முன்புறம், பசுபதிபாளையம் பஸ் ஸ்டாப், வாங்கப்பாளையம் சுங்க சாவடி அருகில், கரூர் தான்தோன்றிமலை 4வது மண்டலம் அலுவலகம் முன்புறம், வெங்கமேடு பிள்ளையார் கோவில் முன்புறம் ஆகிய இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.