/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்
/
புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்
புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்
புகழூர் ரயில்வே கேட் அருகே கார் மோதி தொழிலாளி காயம்
ADDED : ஜூலை 04, 2024 03:00 AM
அரவக்குறிச்சி: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார்
அருகே உள்ள பொத்தனுார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர், 37. இவர், கிரில் பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார்.
சங்கர் தனது மாமியாரை அழைத்துக் கொண்டு, டூவீலரில் புன்னம்சத்திரம் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது புகழூர் ரயில்வே கேட் அருகே, அதிவேகமாக சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் சங்-கருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரது மாமி-யாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைய-டுத்து இருவரும் மீட்கப்பட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காரை வேகமாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய வேலாயுதம்பாளையம் செல்லப்பகவுண்டர் தெருவை சேர்ந்த நல்லசிவம், 52, என்பவர் மீது, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.