/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா
/
கரூர் மாவட்டத்தில் ஆடி கிருத்திகை விழா
ADDED : ஜூலை 30, 2024 04:48 AM
கரூர்: ஆடி கிருத்திகையையொட்டி, கரூர் மற்றும் வேலாயுதம்பா-ளையம் முருகன் கோவில்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
தமிழகம் முழுவதும், நேற்று ஆடி கிருத்திகை விழா கொண்டா-டப்பட்டது. அதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், தான்தோன்றிமலை பாலசுப்பிரமணிய கோவில், வெண்-ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில், புகழிமலை பால-சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை பால-சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் மேகபாலீஸ்வரர் கோவில் ஆகியவற்றில், மூலவர் முருகப் பெருமானுக்கு, 18 வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிேஷகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
முன்னதாக, கரூர் வெங்கமேட்டில் இருந்து பக்தர்கள், வெண்-ணைமலை பாலசுப்பிரமணிய கோவிலுக்கும், கரூர் அமராவதி ஆற்றில் இருந்து புன்னம் சத்திரம் பாலமலை பாலசுப் பிரமணிய கோவிலுக்கும் பால் குடம், தீர்த்த குடம் எடுத்து பக்தர்கள் ஊர்-வலமாக சென்றனர்.