ADDED : மே 02, 2024 11:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்-சேலம் பழைய சாலை வெண்ணை மலையில், பொதுமக்கள் குப்பைகளை சாலையில் கொட்டியுள்ளனர். கடந்த சில நாட்களாக தேங்கிய குப்பை அகற்றப்படாமல் உள்ளது. இதனால், காற்று பலமாக வீசும் போது, குப்பை பறக்கிறது.
மேலும், அந்த பகுதியில் உலா வரும் நாய்கள், குப்பையை சாலை நடுவே இழுத்து போட்டு விடுகிறது. வெண்ணைமலை சாலை முழுவதும், இரண்டு பக்கமும் குப்பைகளாக காட்சியளிக்கிறது. தேங்கிய குப்பையை அகற்ற, காதப்பாறை பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

