/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குப்பையை சாலையில் வீசுவோர் மீது நடவடிக்கை தேவை
/
குப்பையை சாலையில் வீசுவோர் மீது நடவடிக்கை தேவை
ADDED : மே 25, 2024 02:35 AM
கரூர்: சாலையில், குப்பை வீசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட சின்ன ஆண்டாங்கோவில், என்.கே. நகர், பெரியார் நகர், புது காலனி, ராஜீவ்காந்தி நகர், ராம்நகர், ஸ்டேட் வங்கி காலனி, வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் குப்பையை வீசி செல்கின்றனர். சாலையில் தேங்கும் குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதாலும், காற்றடிக்கும்போது பறப்பதாலும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
ஏற்கெனவே சாலையில் குப்பை கொட்டக்கூடாது, கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டும், அதை யாரும் கண்கொள்ளாமல் சாலையோரம் கொட்டி வருகின்றனர். இதை தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

