/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஆதிநத்தம் மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
/
ஆதிநத்தம் மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்
ADDED : ஜூலை 03, 2024 11:29 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., ஆதிநத்தம் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொளக்கார மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பெருந்திருவிழா கடந்த ஜூன், 25 இரவு கம்பம் நடுதலுடன் துவங்கியது. கடந்த, 30ல் அம்மன் திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நடந்தது.
நேற்று முன்தினம் இரவு, தெற்குப்பட்டி பல்லக்கு, வடக்குப்பட்டி கரகம் மற்றும் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, பல்லக்கு தேரில், 3 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு ஏறியது. இதை பார்த்து பொது மக்கள் பயந்து ஓடினர். அருகில் இருந்துவர்கள் பாம்பை குச்சி மூலம் தட்டிவிட்டு, முற்செடியில் விரட்டி விட்டனர். இதனால் பரபரப்பு காணப்பட்டது.
நேற்று காலை, கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெருந்திருவிழாவில் ஹிந்து சமய அறநிலைய துறை தக்கார் தங்கராஜ், செயல் அலுவலர் நரசிம்மன், ஆய்வாளர் மாணிக்க சுந்தரம், மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.