/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
/
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மாஜி அமைச்சர் முன் ஜாமின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 06, 2024 08:47 AM
கரூர் : அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை, கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்றைக்கு ஒத்திவைத்தது.
கரூர் அருகே தோரணகல்பட்டி, குன்னம்பட்டி பகுதியில் உள்ள, 22 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம், கிரையம் செய்து கொண்ட-தாக யுவராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீது, கரூர் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகார் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசா-ரித்து வருகின்றனர். இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையை தவிர்க்க, முன் ஜாமின் கேட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மனு கடந்த மாதம், 25ல், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், கரூர் அருகே வாங்கல் காட்டூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பிரகாஷ், 50; என்-பவர் கொடுத்த புகார்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், யுவராஜ் உள்ளிட்ட பலர் மீது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ் வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா-ரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசா-ரிக்கும் வழக்கு, வாங்கல் போலீசார் பதிவு செய்த வழக்கில் இடைக்கால முன் ஜாமின் கேட்ட, முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் மனு, நேற்று முன்தினம் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, இரண்டு வழக்குகளிலும் முன் ஜாமின் கேட்டு, முன்னாள் அமைச்சர் விஜய-பாஸ்கர், தாக்கல் செய்த மனு மீதான விசா-ரணை, நேற்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சண்முக சுந்தரம், முன் ஜாமின் மனு மீதான விசார-ணையை, இன்றைக்கு ஒத்திவைத்து உத்தர-விட்டார். கடந்த, 20 நாட்களுக்கும் மேலாக விஜய பாஸ்கர் தலைமறைவாகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.