/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குண்டு எறிதல் போட்டிக்கு அரவக்குறிச்சி மாணவர் தேர்வு
/
குண்டு எறிதல் போட்டிக்கு அரவக்குறிச்சி மாணவர் தேர்வு
குண்டு எறிதல் போட்டிக்கு அரவக்குறிச்சி மாணவர் தேர்வு
குண்டு எறிதல் போட்டிக்கு அரவக்குறிச்சி மாணவர் தேர்வு
ADDED : ஆக 30, 2024 05:00 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி ஊராட்சி
ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர் வட்டெறிதல், குண்டு எறிதலில் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளார்.
அரவக்குறிச்சி குறுவள மைய, தடகள போட்டிகள் டி.என்.பி.எல்., காகித புரத்தில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கான போட்டியில், எட்டாம் வகுப்பு மாணவன் ரெனோவா ரெக்ஸ் வட்டெறிதல் மற்றும் குண்டு எறிதலில் இரண்டாம் இடம் பெற்று, மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்றதற்கான பதக்கங்களையும், சான்றிதழ்களையும் உடற்கல்வி இயக்குனர் கதிர்வேல் வழங்கினார்.வெற்றி பெற்ற மாணவரையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் சங்கர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சகாயவில்சன் ஆகியோரை, வட்டார கல்வி அலுவலர்கள் பாண்டித்துரை, சதீஷ்குமார், தலைமை ஆசிரியர் சாகுல் அமீது ஆகியோர் பாராட்டினர்.