/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 10, 2024 06:42 AM
குளித்தலை: குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்-துவ பணி இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
குளித்தலை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நேற்று காலை புதியதாக பொறுப்பு ஏற்ற, மாவட்ட மருத்துவப்-பணி இணை இயக்குனர் செழியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வெளி நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவம், பல் மருத்துவம், ரத்த பரிசோதனை பிரிவு, நோய் தொற்றா பிரிவு, பொது கழிப்பறை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு நடத்தினார்.
இதில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் மற்றும் ஆக்சிஜன் இருப்பு குறித்தும் தெரிந்து கொண்டார். மருந்து, மாத்திரை வழங்கும் கட்டடம், ஓ.பி சீட்டு வழங்கும் மையம், நேச்சுரோபதி மருத்துவம், காசநோய் பிரிவு, எக்ஸ்ரே பிரிவு உள்ளிட்ட இடங்களையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மகப்பேறு மருத்துவ மையத்தில் தாய்மார்கள் மற்றும் சிசுக்கள் பராமரிப்பு குறித்தும், அறுவை சிகிச்சைக்கு தேவையாக உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதன், மருத்துவர்கள் விஜய்-சுரேந்தர், திவாகர், ஆனந்தராஜ், மற்றும் செவிலியர்கள், பணியா-ளர்கள் உடன் இருந்தனர்.