/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போராடும் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி கைது அரசின் செயல்பாட்டுக்கு சங்கங்கள் கண்டனம்
/
போராடும் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி கைது அரசின் செயல்பாட்டுக்கு சங்கங்கள் கண்டனம்
போராடும் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி கைது அரசின் செயல்பாட்டுக்கு சங்கங்கள் கண்டனம்
போராடும் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தி கைது அரசின் செயல்பாட்டுக்கு சங்கங்கள் கண்டனம்
ADDED : ஆக 01, 2024 07:28 AM
கரூர்: போராடும் ஆசிரியர்களை, அராஜக முறையில் தடுத்து நிறுத்தி கைது செய்யும் அரசின் செயல்பாடு கண்டனத்துக்கு உரியது என, பல்வேறு சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆர்.மணிகண்டன் கூறியதாவது: 90 சதவீத ஆசிரியர்களை பாதிக்கும் அரசாணை எண்-243 ஐ ரத்து செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்-களை, கைது செய்வதை கைவிட வேண்டும். தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை. கடந்த அக்டோபரில் போராட்டம் அறிவித்தபோது, அரசு பேச்சு வார்த்-தைக்கு அழைத்தது. 12 கோரிக்கைகளை ஏற்று கொள்வதாக தெரி-வித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆறு மாதங்களுக்கு பின் கூட, ஏற்றுக் கொள்ளப்-பட்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை.
நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க, மாநில பொதுச்செயலாளர் மூ.மகேந்திரன்: 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து, ஜனநாயக முறைப்படி போராடி வரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தை, அராஜக முறையில் தடுத்து நிறுத்தும் அரசின் செயல்பாடு மிகவும் கண்டனத்துக்கு உரியது. போராட்டத்தை துவங்குவதற்கு முன்பாகவே, போராட்ட களத்திற்கு வருகை தந்து கொண்டிருந்த ஆசிரியர்களை கைது செய்து அழைத்து செல்-வது, அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும். தேர்தல் வாக்குறு-தியில் சொல்லியபடி, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கை-களை நிறைவேற்றி சுமூகமான தீர்வு காண வேண்டும்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சி.பொன்னம்பலம்: தற்போது அரசாணை-243ல், ஊராட்சி ஒன்றிய அளவில் இருந்த பதவி உயர்வு முன்னுரிமை பட்டியலை மாற்றி, மாநில அளவில் கொண்டு சென்றது, ஆசிரி-யர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை உருவாக்கி உள்ளது. பெண் ஆசிரியர்கள் பதவி உயர்விற்கு செல்ல முடியாத நிலை ஏற்-பட்டுள்ளது. இந்த அரசாணையால், பல தொடக்க, நடுநிலைப்-பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது. மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி மாவட்ட தலைவர் எம்.ஏ.,ராஜா: கடந்த 2023 அக்.,12ல், பள்ளிக் கல்வித்-துறையுடன் நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்புக்-கொண்ட கோரிக்கைகளை கூட, 10 மாதங்களாகியும் நிறைவேற்ற-வில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதியத்தை, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் போல உயர்த்தி வழங்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில், அனைத்து அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்-கைகளை வலியுறுத்தி, நியாயமான முறையில் போராடி வரும் எங்களை கைது செய்வது நியாயமல்ல.
* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, கடவூர் வட்டார கொள்கை பரப்பு செயலாளர் என்.சிவக்குமார்: டிட்டோ-ஜாக் போராட்டம், ஏதோ விருப்பத்திற்காக நடத்தும் போராட்டம் அல்ல. இந்த அரசால் ஆசிரியர்கள் மீது திணிக்கப்பட்டதால் போராட்டம் நடக்-கிறது. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்-டத்தை வழங்குவேன் என்று வாக்குறுதி அளித்து, மூன்று ஆண்டு-களாகியும் அரசு எதையும் செய்யவில்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், ஆசிரியர்களுடைய நிதி சார்ந்த, நிதிசாராத கோரிக்கைகள் என்று பிரித்து, அதில் எது சாத்தியமோ அதை நடைமுறைப்படுத்துவதாக தொடர்ந்து சொல்லிக் கொண்டே வரு-கிறார். இதுவரை எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இவ்வாறு கூறினர்.