/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு
/
ஏ.டி.எம்., மையத்தில் புகுந்த பாம்பால் பரபரப்பு
ADDED : செப் 03, 2024 03:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை பஸ் ஸ்டாண்டு, நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகே, இண்டியா ஒன் ஏ.டி.எம்., மையம் உள்ளது.
நேற்று காலை 10:30 மணியளவில், அங்-குள்ள அறையில் நேற்று கொம்பேறி மூக்கன் பாம்பு புகுந்தது. பணம் எடுக்க வந்திருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்தனர். முசிறி தீயணைப்பு வீரர்கள், ஏ.டி.எம்., அறையில் இருந்த கொம்பேறி மூக்கன் பாம்பை லாவகமாக பிடித்து, சாக்கு பையில் போட்டனர். பின், பாம்பை வனத்துறை அலுவலர் சிவ-ரஞ்சனி பெற்றுக் கொண்டு, காட்டில் விடுவதற்கு கொண்டு சென்றார்.