/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மூன்று பேரை ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல்
/
மூன்று பேரை ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல்
ADDED : செப் 11, 2024 06:34 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் குடி தெருவை சேர்ந்த ராகுல், 26, நண்பர் முகேஷ், 18, ஏழுமலை, 20, ஆகியோர் கடந்த, 8 இரவு, 10:30 மணியளவில் ராஜேந்திரம் சிவன் கோவில் அருகில் நடந்து சென்றனர்.
அப்போது, ராஜேந்திரம் கிராமத்தை சேர்ந்த தனுஷ், சங்கர், மணி, ஜெகதீஷ் ஆகிய நான்கு பேர் சேர்ந்து, எங்க ஊர் வழியாக போகும்போது ஆட்டம் போட்டுகிட்டு போறீங்களா என தகராறு செய்து, தகாத வார்த்தை பேசி, கம்பி, கட்டை,
கத்தியால் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர். பாதிக்கப்-பட்ட முகேஷ், ஏழுமலை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து ராகுல் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு
செய்து தனுஷ், சங்கர், மணி, ஜெகதீஷ் ஆகிய நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.

