/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.15.57 லட்சம் மதிப்புள்ள விளை பொருட்கள் ஏலம்
/
ரூ.15.57 லட்சம் மதிப்புள்ள விளை பொருட்கள் ஏலம்
ADDED : பிப் 25, 2025 04:36 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 15 லட்சத்து 57 ஆயிரத்து 159 ரூபாய்க்கு விற்பனை நடந்-தது.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகில், சாலைபுதுார் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்-டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 3,742 தேங்காய்களை விற்-பனைக்கு கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 38.60 ரூபாய், அதிகபட்சமாக, 51.19 ரூபாய், சராசரியாக, 45.25 ரூபாய்க்கு ஏலம் போனது.மொத்தம் 1,087 கிலோ எடையுள்ள தேங்காய்கள், 50 ஆயிரத்து 979 ரூபாய்க்கு விற்பனையானது.கொப்பரை தேங்காய், 348 மூட்டைகள் வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 140.88 ரூபாய், அதிக பட்சமாக, 147.44 ரூபாய், சராசரி-யாக, 145.67 ரூபாய், இரண்டாம் தரம் குறைந்தபட்சமாக, 96 ரூபாய், அதிகபட்சமாக, 143.44 ரூபாய், சராசரியாக, 128.59 ரூபாய்க்கு ஏலம் போனது.மொத்தமாக 9,502 கிலோ எடையுள்ள கொப்பரை தேங்காய், 13 லட்சத்து 11 ஆயிரத்து 423 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதேபோல் கருப்பு ரகம் எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக, 170.99 ரூபாய், அதிகபட்சமாக, 198.99 ரூபாய், சராசரியாக, 193.99 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 1,064 கிலோ எடையுள்ள எள், 1 லட்-சத்து, 94 ஆயிரத்து, 757 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தமாக தேங்காய், கொப்பரை தேங்காய், எள் சேர்த்து, 15 லட்சத்து, 57 ஆயிரத்து, 159 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.