/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் முன் கழிவுநீர் தேங்கியதால் அவதி
/
மாரியம்மன் கோவில் முன் கழிவுநீர் தேங்கியதால் அவதி
ADDED : ஆக 03, 2024 01:32 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி மாரியம்மன் கோவில் செல்லும் சாலை அருகே, சின்டெக்ஸ் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் தண்ணீர் பிடித்து, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கள் தண்ணீர் பிடிக்கும் போது சிந்தும் நீர், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி தேங்கி வழிந்து, அங்குள்ள மாரியம்மன் கோவில் சாலையில் சாக்கடை போல் நிற்கிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், கழிவுநீரை மிதித்துக்கொண்டு முகம் சுளித்து செல்கின்றனர். மேலும் வாகனங்களில் செல்லும் போது, கழிவுநீர் தெறிக்கிறது. எனவே, கோவில் முன் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற, தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.