/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
/
ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
ADDED : செப் 05, 2024 02:39 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கல்லுாரி வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு கண்காட்சி
நடந்தது.
கலெக்டர் தங்கவேல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இங்-குள்ள ஊட்டச்சத்து ஆலோசனை மையத்தில், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சத்து குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. மேலும், கண்காட்சியில் பாரம்பரிய உணவு பண்டங்கள் மற்றும் மனித உறுப்புகளின் செயல்பாடுகளின் செயல் மாதிரிகள் வைக்-கப்பட்டிருந்தன. மேலும் மனித உறுப்புகளின் செயல்பாடுகளை உயிரோட்டமாக காட்சிப்படுத்தப்பட்டது. தீ மற்றும் தீயில்லா சமையல் என்ற தலைப்பில் உணவுகள் தயாரிக்கும் போட்டி நடத்-தப்பட்டது.
கரூர் அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர், ஒருங்கி-ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் சுவாதி, ஊட்டச்-சத்து மற்றும் உணவு முறைகள் துறை தலைவர் ஜாகீர்உசைன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.