/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
/
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ADDED : செப் 03, 2024 03:35 AM
கரூர்: கரூர், தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில், தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கலெக்டர் தங்கவேல், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின் அவர், கூறியதாவது:
தேசிய ஊட்டச்சத்து வார விழா, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் நலத்தை, ரத்த சோகையிலிருந்து பாதுகாத்தல், குழந்தை-களின் வளர்ச்சி ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
இதை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பாக, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊட்-டச்சத்து கண்காட்சியை கலெக்டர் உள்பட அனைவரும் பார்வை-யிட்டனர்.