/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர்-திருச்சி சாலையில் தடுப்பு சுவர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
/
கரூர்-திருச்சி சாலையில் தடுப்பு சுவர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
கரூர்-திருச்சி சாலையில் தடுப்பு சுவர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
கரூர்-திருச்சி சாலையில் தடுப்பு சுவர் அச்சத்தில் செல்லும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூன் 25, 2024 02:09 AM
கரூர்: கரூர், திருச்சி சாலையில் தடுப்பு சுவர்கள் காரணமாக தொடர்ந்து விபத்து ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர்.
கரூர்-திருச்சி நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், காந்திகிராமம் பகுதியில் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இங்குள்ள வணிக நிறுவனங்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், கடைகள் ஆக்கிரமிப்பு போன்ற காரணத்தால் சாலையில் போக்கு நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சாலையின் நடுவில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
காந்தி கிராமம் டபுள் டேங்க, இ.காலனி, காந்தி
கிராமம், மாநகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் பிரிவு சாலை உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லுாரி வாகனங்கள் செல்கின்றன. அப்போது பிரிவு சாலையை கடக்கும் போது, தடுப்பு சுவர் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவில் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில், தடுப்பு சுவரில் போதுமான ஒளிரும் விளக்குகளோ, எச்சரிக்கை விளக்குகளுடன் கூடிய பலகையோ இல்லாததால், ஆறு மாதத்திற்குள், 15-க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் காயமடைந்துள்ளனர். எனவே அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, தடுப்பு சுவர்கள் குறித்து தெளிவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.