/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை
பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை
பரணி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 16, 2024 03:15 AM
கரூர்: கரூர், பரணி பார்க் வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பள்ளி மாணவி அக் ஷயா, ரிதன்யா ஆகியோர் தலா, 494 மதிப்பெண்கள், ஹரீஸ்குமார், 493 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர். மேலும், 490 மதிப்பெண்ணுக்கு மேல் மூன்று பேரும், 480 மதிப்பெண்ணுக்கு மேல் எட்டு பேரும், 470 மதிப்பெண்ணுக்கு மேல், 21 பேரும், 450 மதிப்பெண்ணுக்கு மேல், 49 பேரும் பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் இரண்டு பேரும், தமிழில் ஐந்து மாணவர்களும், கணினி அறிவியலில், ஏழு மாணவர்கள் என, 14 பேர் 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 12 வகுப்பு பொதுத்தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளியின் சராசரி மதிப்பெண், 411 என்பது குறிப்பிடத்தக்கது.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ரிதுஸ்ரேயா, 484 மதிப்பெண்ணும், ஹரிணி, 481 மதிப்பெண்ணும், ஆதித்யா, 479 மதிப்பெண்ணும் பெற்றுள்ளனர். ஜே.இ.இ., மெயின் தேர்வில் மாணவர் ஹரிஸ்குமார், 99.9 சாவீதம் பெற்றுள்ளார். பள்ளியை சேர்ந்த, 36 பேர் என்.ஐ.டி., கல்லுாரியில் சேர தகுதி பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகள், ஆசிரியர்களை பரணி கல்வி குழும தலைவர் மோகனரங்கன், செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி அசோக் சங்கர், முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின் கிரிஸ்டல் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.