/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் தொகுதியில் கோஷ்டி பூசலால் ஓட்டு சதவீதத்தை இழந்த பா.ஜ.,
/
கரூர் தொகுதியில் கோஷ்டி பூசலால் ஓட்டு சதவீதத்தை இழந்த பா.ஜ.,
கரூர் தொகுதியில் கோஷ்டி பூசலால் ஓட்டு சதவீதத்தை இழந்த பா.ஜ.,
கரூர் தொகுதியில் கோஷ்டி பூசலால் ஓட்டு சதவீதத்தை இழந்த பா.ஜ.,
ADDED : ஜூன் 06, 2024 03:56 AM
கரூர்: கரூர் லோக்சபா தொகுதியில், பல இடங்களில் அமைப்பு பலமில்லாததாலும், கோஷ்டி பூசலாலும், பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.கரூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக, அக்கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் போட்டியிட்டார்.
இவர், 1 லட்சத்து, 2,482 ஓட்டுக்களை பெற்று தோல்வியடைந்தார். சரியான அமைப்பு பலம் இல்லாததாலும், கோஷ்டி பூசலாலும் இவருக்கு ஓட்டுக்கள் குறைந்துள்ளது.இது குறித்து, பா.ஜ., நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில், மாநில தலைவர் அண்ணாமலை வருகைக்கு பின், கட்சி வளர்ச்சி நோக்கி சென்று கொண்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதி தோல்விக்கு பின், அமைப்பு பலமில்லை என்பதை அண்ணமலை உணர்ந்தார். அதன்பின், அ.தி.மு.க.,வில் இருந்த வந்த செந்தில்நாதன் மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டு, கரூர் மாவட்டத்தை சற்று பலப்படுத்தியுள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் பா.ஜ., தனித்து போட்டியிட்டபோது, 2.14 சதவீதம் ஓட்டுக்களை பெற்றது.28 ஆண்டுகளுக்கு பின், கரூர் லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிட்டார். இவர், 9.05 சதவீத ஓட்டுக்களை பெற்றார். வேடசந்துார், மணப்பாறை, கரூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் தலா, 17 ஆயிரம் முதல், 20 ஆயிரம் வரை ஓட்டுக்களை பெற்றுள்ளார். ஆனால் விராலிமலையில், 11,703, கிருஷ்ணராயபுரத்தில், 13,595 என குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ளார்.கரூர் மாவட்டத்தில், உட்கட்சி பூசல் காரணமாக, பா.ஜ., பல ஆண்டுகளாக வளரவில்லை. செந்தில்நாதன் வந்த பின் கூட, ஏற்கனவே உள்ள நிர்வாகிகளை மாற்ற முடியவில்லை. அவர்கள் தேர்தல் வேலை செய்வதற்கு பதிலாக, செந்தில்நாதன் பற்றி தலைமைக்கு புகார் மனு அனுப்புவதில் குறியாக இருந்தால், ஓட்டுக்கள் குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் கட்சி வளர்ச்சி பெறவில்லை. இங்கு பூஜ்யம் அளவில் அமைப்பு பலம் உள்ளது. குறைபாடுகளை சரி செய்து கட்சிக்கு புதிய ரத்தம் ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்றாக கரூர் மாவட்டத்தில் பா.ஜ., வளர்ச்சி அடையும்.இவ்வாறு கூறினர்.