/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்
/
அரசு உயர்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்
அரசு உயர்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்
அரசு உயர்நிலைப் பள்ளியில் ரத்த வகை கண்டறியும் முகாம்
ADDED : ஜூலை 20, 2024 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:லயன்ஸ் கிளப் ஆப் மெஜஸ்டிக், கரூர் வாலண்டரி ரத்த வங்கி மற்றும் ரோஜ் அறக்கட்டளை சார்பில், என்.புதுார் அரசு உயர்நிலைப் பள்ளியில், ரத்தவகை கண்டறியும் முகாம் நடந்தது.
அதில், 170 மாணவ, மாணவிகளுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது. பிறகு, ரத்ததானம் அவசியம் குறித்து, மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழனியப்பன், பள்ளி தலைமையாசிரியர் வள்ளிராசன், ரத்த வங்கி நிர்வாகி சரவணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.