/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?
/
சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?
சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?
சேதமான பள்ளி சத்துணவு கூடம் பாதிப்புக்கு முன் சீரமைக்கப்படுமா?
ADDED : செப் 16, 2024 03:19 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் ரங்கா அரசு நிதி உதவிபெறும் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பரளி, கருங்குளப்பள்ளி, கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் உள்ள சத்துணவு கூடம் விரிசலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த சத்துணவு கூடத்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதற்கு முன், கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய சத்துணவு கூடம் அமைக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர், பள்ளி நிர்வாகத்திற்கும், ஒன்றிய நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால், யூனியன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து, யூனியன் கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில், ''பள்ளியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.