/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பணி செய்ய விடாமல் தடுப்பு அ.தி.மு.க., மாஜி மீது வழக்கு
/
பணி செய்ய விடாமல் தடுப்பு அ.தி.மு.க., மாஜி மீது வழக்கு
பணி செய்ய விடாமல் தடுப்பு அ.தி.மு.க., மாஜி மீது வழக்கு
பணி செய்ய விடாமல் தடுப்பு அ.தி.மு.க., மாஜி மீது வழக்கு
ADDED : ஏப் 03, 2024 01:27 AM
மறவாப்பாளையம்:கரூர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், கரூர் லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து கடந்த, 31ல், கரூர் அருகே மறவாப்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பகுதியில், பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி, 10க்கும் மேற்பட்ட கார்களில் செல்லக்கூடாது என, தான்தோன்றிமலை பஞ்., யூனியன் பி.டி.ஓ., வினோத்குமார், அ.தி.மு.க.,வினரை எச்சரித்தார்.
இதனால் கோபமடைந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பணி செய்ய விடாமல் அந்த அதிகாரியை தடுத்து, தகாத வார்த்தைகள் பேசி மிரட்டல் விடுத்ததாக, போலீசில் பி.டி.ஓ., வினோத்குமார் புகார் அளித்தார்.
இதன்படி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உதவியாளர் ரமேஷ், ஒன்றிய செயலர் மதுசூதன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மீது, வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

